‘பாரத் பந்த்’ – டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்..!


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 300 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read  சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read  கொரோனா தடுப்பு - மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்...!

இந்த போராட்டத்துக்கு புதுச்சேரி, கேரளா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட், ஆந்திர மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read  "100 கோடி என்பது புதிய அத்தியாயத்தின் தொடக்கம்!" - பிரதமர் மோடி உரை..!

டெல்லியில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. குருகிராம், காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கார்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருவதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ரயில்களின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

4ஜி சேவையை தொடங்கிய பி.எஸ்.என்.எல் – மத்திய அமைச்சர் ட்வீட்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசியால் கண் பார்வை பெற்ற மூதாட்டி…!

Lekha Shree

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

பாராசிட்டமால் பவுடருக்கு பதில் சாக்பீஸ் தூள்…! உ.பி.யில் 9 பேர் கைது…!

sathya suganthi

மத்திய பிரதேசத்தில் விளையும் சிவப்பு நிற வெண்டைக்காய்…! இதை சாப்பிடுவதால் என்ன நன்மை?

Lekha Shree

குஜராத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! 2 பேர் பலி..!

Lekha Shree

தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

Lekha Shree