“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்..!” – அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..!


ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக அன்புமணி எம்.பி.க்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் நிறைய பாராட்டுகளை பெற்றாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாக கூறி சர்ச்சை வெடித்துள்ளது.

இதில், சூர்யாவுக்கு ஆதரவாக பல அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், “சூர்யாவை விமர்சிப்பது நியாயம் அல்ல” என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக அன்புமணி எம்.பி.க்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “சகோதரர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப்போராளியாக படைப்பாளியாக நின்று பேசிய உரிமையில் உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.

Also Read  மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக் கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன்வைக்கும் ஒரு இயங்குதளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால் தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது. பல வாழ்க்கை படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது, உண்மை எது? தவறு எது? என தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டது ஜெய்பீம்.

அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு, தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம் கடந்த கால சம்பவங்களை படமாக்கும் போது அதை படமாக பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

Also Read  பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

அதில் பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியவர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் வேதம் புதிது… முடக்க முயற்சித்தபோது புரட்சித் தலைவர் உடன் நின்றார்.

அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அதுபோன்றதொரு படைப்பு ஜெய்பீம் படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும் உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம் தான் இது.

தம்பி சூர்யாவை பொறுத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவர் அல்ல. கல்வி, எளியவர்களுக்கு உதவி என நகர்ந்து கொண்டிருப்பவர். ஒரு இயக்குனரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவி உள்ளார்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு காண்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா என பார்ப்பவர். அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்முறையை ஏவி விடுவது மிக தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

Also Read  'தலைவி' படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளை கொண்டு வர உதவும். சினிமாவை விட்டு, இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன.

மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வர வேண்டாமே…

நடுவன் அரசு, மாநில அரசு சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்… யாருக்கு பயந்து படம் எடுக்க வேண்டும் என தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை எப்போதும் செவி கொடுத்துக் கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனை ஏன் தேவையற்ற வார்த்தை போர்?

ஒரு அலைபேசியில் முடித்து இருக்க வேண்டியதை சிறு தவறுகளை சுட்டிக்காட்டி தீர்க்க வேண்டிய இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றி எரியும் நெருப்புத்துக்களாகியது ஏன் என புரியவில்லை.

எதுவாக இருந்தாலும் எங்களோடு பேசுங்கள் சரி என்றால் சரி செய்து கொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி. எப்போதும் உங்கள் நட்புறவை விரும்பும் பாரதிராஜா” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!

Lekha Shree

மீண்டும் இணையும் ‘சூரரைப் போற்று’ வெற்றி கூட்டணி?

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

பாமக மீது நடவடிக்கை கோரி மனு

Tamil Mint

மாநாடு படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! அட இவரா !ரசிகர்கள் மகிழ்ச்சி…

HariHara Suthan

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj

ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

sathya suganthi

சசிகலாவுடன் சந்திப்பு? – கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்…!

Tamil Mint

கணவரை பிரிவதாக அறிவித்த உடுமலை கௌசல்யா.. !

suma lekha

அக்டோபர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘டாக்டர்’..!

Lekha Shree

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint