a

“கவிஞனே நீ சமுத்திரம்!” – வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!


தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து கேரளாவின் உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருதுக்கு முதல்முறையாக கேரளத்தை சாராத ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு பல பிரபலங்கள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அந்தவகையில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இந்த உயரிய விருதை வழங்குவது நாம் மறைந்த ஓஎன்வி அவர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய அவமரியாதை என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நடிகை ரீமா கல்லிங்கல் மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியவர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Also Read  'கர்ணன்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

அதைத்தொடர்ந்து ஓஎன்வி கலாச்சார அகாடமி, “விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓஎன்வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்” என கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

அதில், “மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓஎன்வி எங்கள் கவிப்பேரரசுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்… ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதைக் கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை.

சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழியின் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ, தனி மனித மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்படாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும்.

தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Also Read  இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் எரியட்டும். அவர்களின் தாகம் தீரட்டும். குளம் என்பது கானல் நீர். நீ சமுத்திரம்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

கொரோனா 3ம் அலை: ரூ. 2 கோடி கொடுத்து உதவிய அனுஷ்கா – கோலி தம்பதி!

Shanmugapriya

அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

HariHara Suthan

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

Tamil Mint

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் உருவான புதிய படத்தின் டிரைலர்…

VIGNESH PERUMAL

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint