பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை


கவிஞர் பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பாரதி திருவிழாவில் டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர  மோடி, வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். சுப்ரமணிய பாரதிக்கு அவரது பிறந்த நாளன்று மரியாதை செலுத்துகிறேன். சர்வதேச பாரதி திருவிழாவில் பங்கேற்பதில் பெருமகிழச்சி அடைகிறேன்.

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் பெண்கள் விளங்கவேண்டும் என்று அவர் எழுதினார். அவரது லட்சியத்தால் ஊக்கம் பெற்று, பெண்கள் தலைமையிலான அதிகாரமளித்தலை உறுதிசெய்ய நாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். புதிய இந்தியாவின் மகளிர் சக்திக்கான காலமிது என்றார். வாரணாசிக்கும்-பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. துணிச்சலாக செயல்பட்டவர்  பாரதியார். பிரிவினை இருந்தால் அந்த சமூகம் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை நன்கு தெரிந்து பாரதி வைத்திருந்தார். பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Also Read  "ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை" - கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

மனிதகுலத்துக்கு புதுமைகளை வழங்கும் இன்றைய இளைஞர்களிடம் அவரது உணர்வை நான்  காண்கிறேன். நமது நாட்டுக்கும், உலகத்துக்கும் இது பெருமைகளை தேடித்தரும் என்றார். எதிர்காலத்தை பற்றி சிந்தித்த பாரதி அடித்தட்டு மக்களுடன் தொடர்பில் இருந்தார். கலாச்சாரம், பாரம்பரியம் &  கடந்த காலத்தின் சிறப்புகள் குறித்த  பாடல்களை இயற்றினார். கடந்த காலத்திலேயே வாழ்ந்து விட கூடாது, அறிவியல் ஆர்வத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பாரதி கூறினார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

பல இடங்களில் இணைய சேவை துண்டிப்பு; விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போன டெல்லி!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya

வாட்ஸ்அப் பேமென்ட் வசதிக்கு இந்திய அரசு அனுமதி

Tamil Mint

“இம்மாதமே கொரோனா 3ம் அலை துவங்கும்” – எச்சரிக்கும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்..!

Lekha Shree

விரைவில் சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி..!

Lekha Shree

மின்னல் தாக்கி பலர் உயிரிழப்பு… பிரதமர் மோடி இரங்கல்..!

Lekha Shree