’விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’.. முதல்முறையாக மனம் திறந்த பாவனா.!


தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். தமிழில் தீபாவளி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அசல் படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.

Bhavana: My role Chinminiki in BhajArangi 2 is like a thug- Cinema express

நடிகை பாவனா மலையாள சினிமா உலகில் தான் அறிமுகமானார். இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவர் தமிழை விட மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருச்சூரில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் தன் காரில் கடத்தப்பட்டு இரண்டரை மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சுனில் என்கிற பன்சர் சுனில். இவர் மலையாள சினிமாவில் உள்ள நட்சத்திரங்களுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொடுக்கும் ஒரு ஏஜென்ட். இவர் பாவனாவுக்கு நன்கு பழக்கமானவர். அது மட்டுமின்றி அவரை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததும் இவர்தான்.

Also Read  தனுஷ் போட்ட ஒரு ட்வீட்… கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்..! என்ன காரணம்?

தனக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக காவல் நிலையம் சென்றார் நடிகை பாவனா. அந்த கேவலமான செயலை பல்சர் சுனில் செய்ததற்கு முக்கிய காரணம் நடிகர் திலீப். அவர்தான் தன்னை இவ்வாறு செய்யச் சொன்னதாக சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

திலீப் இவ்வாறு செய்ய சொன்னதற்கு முக்கிய காரணம், அவர் காவியா மாதவனுடன் நெருங்கியிருக்கும் போட்டோக்களை தன் முதல் மனைவியான மஞ்சு வாரியாருக்கு, நடிகை பாவனா அனுப்பியதாகவும். அதனால்தான் மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலிப்பிற்கும் பிரச்சனை வந்து விவாகரத்து ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனை மனதில் வைத்துதான் நடிகர் திலீப் பாவனாவிற்கு இப்படிப்பட்ட கேவலமான செயலை செய்துள்ளார். அதன்பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு ஆரம்பமானது முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது. அதேபோல இதுவரைக்கும் தன் அடையாளங்கள் மற்றும் தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி நடிகை பாவனா மௌனம் காத்து வந்தார்.

Also Read  பிரபல நடிகைக்கு கல்யாணமா?... திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

சமீபத்தில் கூட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த வழக்குத் தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இவ்வழக்கில் விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், 5 ஆண்டு காலமாகியும் தனக்கு நீதிக் கிடைக்கவில்லை என்று கொதிதெழுந்து, தன் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாவனா.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்டவரில் இருந்து ஒரு போராளியாக மாறும் இந்த பயணம் எனக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக என் பெயர், என் அடையாளம் அனைத்தும் மறைக்கப்பட்டது. காரணம், எனக்கு நடந்த குற்றத்தின் ஆழம் தான்.

Also Read  மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி - ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

என்னத்தான் நான் குற்றம் செய்யாதவராக இருந்தாலும், என்னை தனிமைப்படுத்த, என்னை ஒதுக்க பல முயற்சிகள் நடந்தன. அந்த நேரத்தில் எனக்காக குரல் கொடுக்க சிலர் என் வாழ்வில் நுழைந்தார்கள். தற்போது எனக்கு பல குரல்கள் கேட்கும்போது, எனக்கான நீதிக்காக நான் மட்டும் இல்லை இங்கு நிறைய நபர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகின்றது.

நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் என்னைபோல் இன்னொருவர் இதனை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும் என்னுடைய இந்த போராட்ட பயணத்தை தொடர்வேன். எனக்காக என்னுடன் துணையாக நின்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று நடிகை பாவனா முதல்முறையாக பகிரங்கமாக தன் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் அவருக்கு ஆதரவு குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், பாவனாவின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விபத்துக்குள்ளான அர்னால்டின் கார்… காயங்களின்றி உயிர்தப்பிய நடிகர்..!

Lekha Shree

பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

Lekha Shree

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

HariHara Suthan

இந்த வார எலிமினேஷன் மதுமிதாவா? ஷாக்கான ரசிகர்கள்..!

suma lekha

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

‘Expression Queen’ ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ராஜா ராணி 2 சீரியலில் எஸ்.ஜே.சூர்யா…! சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்..!

sathya suganthi

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

வெளியானது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ 2வது பாடல்..!

suma lekha

‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!

Lekha Shree