a

ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! – குவியும் பாராட்டுக்கள்


ஆட்டோவை ஆம்புலன்ஸ் போன்று மாற்றிய ஆட்டோ ஓட்டுனருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது படுக்கை தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

Also Read  கொரோன பரவல் - தமிழகம் 3வது இடம்!

இதனை போக்குவதற்காக பல்வேறு பிரபலங்கள் நிதி உதவிகளை செய்து வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன்னுடைய ஆட்டோவை ஆம்புலன்ஸ் போல வடிவமைத்துள்ளார். மேலும் அங்கு இருக்கக்கூடிய முதல் உதவி உபகரணங்கள் அனைத்தையுமே வைத்துள்ளார்.

Also Read  "கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்" - சச்சின்

நோயாளிகள் மிகவும் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் தன்னை அழைக்கலாம் என சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்ட உடனேயே பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வர தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ” தற்போது சாலைகளில் பல ஆம்புலன்ஸ் உங்களை பார்க்க முடிகிறது. நோயாளிகள் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்ற வருத்தம் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காகவே இதுபோன்று செய்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

Lekha Shree

களவர பூமியான டெல்லி… செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

Tamil Mint

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

இந்தியாவுக்கென பிரத்யேகமான கிரிப்டோகரன்சி அறிமுகம்? – மத்திய அரசு திட்டம்!

Tamil Mint

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

கேரள தொழில்நுட்ப மையத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பெயரை சூட்ட முடிவு: முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

Tamil Mint

இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய சாதனையா? உலகை உன்னிப்பாக பார்க்க வைக்கும் இந்திய இளைஞர்

Tamil Mint

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

Devaraj

கணவர் கண் முன்னே 19 வயது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

புதுச்சேரி: சுரைக்காய் குடுவையில் கேமராவுக்கான ஜூம் லென்ஸ் மாதிரியை செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

Tamil Mint

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya