a

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?


மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் எப்போது ஒழியும் என மக்கள் காத்திருக்கின்றனர். அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாடுகள் ஆகியவை இயல்பான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர்களை கூட பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

மருத்துவம், உணவு மற்றும் பணம் சார்ந்த உதவிகள் பலருக்கும் பிரதானமாக தேவைப்படுகிறது. அந்த வகையில் போபாலை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

Also Read  கொரோனா 2ம் அலை - முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

அவர்கள் அந்த உதவியை வழங்கும்போது முகமூடி அணிந்து இருக்கின்றனர். உணவுப் பொருட்கள் வழங்கும் போதெல்லாம் கைஃபாக்ஸ் முகமூடியை அணிந்து கொள்கின்றனர்.

அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்ற அடையாளம் மக்களுக்கு தெரிய கூடாது. தங்களுடைய உதவி மட்டுமே மக்களை சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

நிவாரணப் பொருட்கள் வழங்கும் போது புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் சேவையை பார்த்து நெகிழ்ந்த சிலர் முகமூடி அணிந்த இளைஞர்களின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டனர்.

அவர்களை பற்றி விசாரித்தபோது போபால் நகரை சேர்ந்த முஜீப், முபீன், அப்துல் ரகுமான், ராஜ் லோதி என தெரியவந்து உள்ளது.

Also Read  பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

இவர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், சுண்டல், துவரம்பருப்பு, அரிசி 3 கிலோ, உப்பு ஒரு கிலோ, இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள், அரை கிலோ டீத்தூள் பாக்கெட், ஒரு கிலோ சர்க்கரை.

அவர்கள் இதை தங்கள் சொந்த பணத்தை கொண்டே செய்து வருகின்றனர். பலர் நிதி உதவி அளிக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதனை பெற்றுக்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் கூறுகின்றனர் அந்த இளைஞர்கள.

Also Read  ஆக்சிஜன் வாங்க நிதி அளித்த பேட் கம்மின்ஸ்: வாழ்த்தும் நெட்டிசன்கள்!

மேலும், விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று உதவட்டும் என்று கூறுகிறார்கள். யாரிடமும் பணம் வாங்காமல் சொந்த பணத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் அதில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த சேவைக்காக பலர் அந்த இளைஞர்களை பாராட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்…..

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

முதல்வர் கருத்து…. இது கொஞ்சம் “ஓவரா தெரியல”… இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்….

VIGNESH PERUMAL

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! – ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு! – எங்கே தெரியுமா?

Shanmugapriya

கண்ணிவெடிகளை கண்டறியும் எலிக்கு ஓய்வு வழங்க அரசு முடிவு!

Shanmugapriya

கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj