a

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக சென்னை அணியின் டு பிலெஸிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.

ருத்துராஜ் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். அவரை தொடர்ந்து தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மொயின் அலி 12 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் விளையாடிய அவர் 8 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் தனது பங்கிற்கு 17 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர்களில் எதிர் அணி பவுலர்களை கடுமையாக சோதித்த டு பிலெஸிஸ் 60 பந்துகளில் 95 ரன்கள் குவித்து மிரட்டி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Also Read  'வாத்தி கம்மிங்' ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ...

கடைசி பந்தை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா அதிலும் ஒரு சிக்சரை அடித்து அமர்க்களப்படுத்தினார். சென்னை அணியின் மிரட்டலான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்ந்தன. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் கடுமையாக திணறியது.

நிதிஷ் ராணா 9 ரன்களில் வெளியேற, கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் இயான் மார்கன், திரிபாதி, சுனில் நரேன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். அட்டகாசமாக பந்துவீசிய தீபக்சேகர் முக்கியமான நான்கு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்து சென்னை அணியின் அழுத்தத்தை போக்கினார்.

தொடர்ந்து தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த ரசல் சென்னை அணி பவுலர்களை பந்தாடினார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்கவிட்ட ரசல் 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்தார். ரசலை ஆட்டமிழக்க செய்ய கடுமையாக திணறிய சென்னை அணி இறுதியாக சாம் கரன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி அவர் நடையைக்கட்டினார். மறுமுனையில் அட்டகாசமாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் 24 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க லுங்கி நிகிடி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.

போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் வந்து விட்டதாக எண்ணிய ரசிகர்களுக்கு அதற்கு பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. ரன்களை வாரி வழங்கிய விரக்தியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய பேட் கம்மின்ஸ் 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்து கடைசிவரை கொல்கத்தாவின் வெற்றிக்காக போராடினார். இருப்பினும் போதிய விக்கெட்களை இல்லாததால் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி நடையைக் கட்டினர். கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அமைந்தது.

Also Read  வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா - மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

குறிப்பாக சாம் கரனின் 15வது ஓவரில் 30 ரன்களை வாரி வழங்க சென்னை அணியின் வெற்றி மெல்ல கை மீறிச் சென்றது. இருப்பினும் கடைசி ஓவரில் முதல் பந்திலேயே தீபக் சஹர் ரன் அவுட் எடுத்துக் கொடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

சென்னை அணி தரப்பில் 4 ஓவர்கள் வீசிய தீபக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் ஆட்டத்தில் களம் இறங்கிய நிகிடி தனது பங்கிற்கு மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றாலும் கொல்கத்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ரசல், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸை பலதரப்பட்டோர் புகழ்ந்து வருகின்றனர். கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் தனது சமூக வலைத்தளங்களில் மூவரையும் பாராட்டி புகந்துள்ளனர்.

Also Read  வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?

வெற்றி நடைபோடும் சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக சென்னை அணி வீரர் டு பிலெஸிஸ் தேர்வு செய்யப்பட்டார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் ஐபிஎல் தொடர்?

Jaya Thilagan

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு – பெருமூச்சு விட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

Jaya Thilagan

யார் யாருக்கு ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம்? ஒரு அலசல் ரிப்போர்ட்..

Jaya Thilagan

ஐபிஎல்-ஐ குறிவைக்கும் கொரோனா – சென்னை அணியில் 2 பேருக்கு தொற்று உறுதி..!

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

வெற்றி நடை போடும் சி.எஸ்.கே. – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jaya Thilagan

சென்னையில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே! விரைவில் ‘தல’ தரிசனம்!

Jaya Thilagan

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

Jaya Thilagan

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan