பிக்பாஸை தடை செய்யவேண்டும்: அ.தி.மு.க மூத்த தலைவர்


தமிழக தேர்தலையொட்டி பல அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். 

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்ற வாரத்தில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க கட்சியை சாடினார். 

அதனை அடுத்து முதல்வர் பழனிசாமியும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை என கூறினார்.

அதையடுத்து, இருகட்சிகளுக்கும் இடையே பூசல் உண்டானது. 

Also Read  தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில், அ.தி.மு.க., வின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடகம், சினிமா, கூத்து என்றால் அடிப்படையில் ஒரு கதை இருக்கும். பாட்டு, சண்டை இருக்கும். 

ஆனால், பிக்பாஸில் என்ன உள்ளது? எதுவுமே இல்லையே. தமிழகத்தில் கலாச்சார சீர்கேட்டை பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாக்கி வருகிறது. அந்த நிகழ்ச்சியால் பல குடும்பங்கள் கெட்டுப்போகின்றன. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். 

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்:

Tamil Mint

தமிழ்நாடு: கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை…!

Lekha Shree

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

தமிழ்நாட்டில் முதல் தனியார் ரயில் :

Tamil Mint

உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலினுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி

Tamil Mint

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint

“ஒரு வருடத்தில் மதுரையை சிட்னி ஆக மாற்றுவேன்” – செல்லூர் ராஜு

Shanmugapriya

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

“சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது” – ஜெயக்குமார்

Lekha Shree

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

சசிகலாவுக்கு ட்ரோன் மூலம் வரவேற்பு! மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்

Tamil Mint