பாவனி மற்றும் சுருதியின் கேவலமான செயல்…தாமரைச் செல்விக்கு ஆதரவளித்த நெட்டிசன்கள்!


பிக்பாஸ் சீசன் 5 நேற்றைய எபிசோடில் பாவ்னி மற்றும் சுருதி செய்த விஷயத்தால் தாமரைச் செல்வி கோபத்தின் உச்சிக்கே சென்றதால் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் பஞ்ச பூத நாணயங்களை 5 பேர் வைத்துள்ளனர். அதில் காற்று என்ற நாணயத்தை தாமரைச் செல்வி வைத்துள்ளார். இந்த நிலையில் தாமரைச் செல்வி டிரஸ்ஸிங் ரூமில் துணி மாற்றிக் கொண்டிருந்தார், அப்போது அவரின் நாணயத்தை எடுக்க சுருதி பெரியசாமி பாவ்னியிடம் உதவி கேட்க, இருவரும் டிரஸ்ஸிங் ரூம் சென்று தாமரைக்கு உதவி செய்வது போன்று நடித்து அவரிடம் இருந்த நாணயத்தை எடுத்துவிடுகின்றனர். இதனால் பதறிய தாமரை ஷாலை போர்த்திக் கொண்டு வந்து ஏன்ப்பா என் காயினை எடுத்தாய், கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்றார்.

Also Read  எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 - வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!
Suruthi starts her game - Thamarai Selvi in tears - Tamil News -  IndiaGlitz.com

மேலும் அந்த நேரத்தில் தான் பார்க்க முடியாதப்படி மறைத்த பாவனியை நீ செய்தது துரோகம் என்றார் தாமரை. ஆனால் தனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று அடித்துப் பேசினார் பாவனி. ஆனால் ஸ்ருதி தாமரையின் காயினை எடுக்க பாவனி தான் உதவினார். என்பது கண்டுக்கூடாக நமக்கு தெரியும்.

இதனால் கோவமான தாமரைச் செல்வி, அந்தக் கோவத்தில் எப்படி வளத்திருக்காங்க பாரு புள்ளைய என எடக்குமடக்காக பேசிவிட்டார். நீ துரோகம் பண்ணிட்ட என வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் பாவ்னியிடம் கொஞ்சம் அள்ளி வீசினார் தாமரைச் செல்வி. தாமரைச்செல்வி சொன்னதும் பாவ்னியும், சுருதியும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பாவம் அவர்களால் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் போவதை தப்பென்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. எபிசோட் முழுவதும் இந்த அழுகைதான் நடந்துகொண்டிருந்தது.

Also Read  நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..
Bigg boss tamil season 5 promo pavani reddy sruthi jeyadevan thamarai fight  | Galatta

புரமோவை பார்த்த தாமரையை திட்டிய நெட்டிசன்கள் அனைவரும் எபிசோடை பார்த்துவிட்டு தாமாரைக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். பாவனிக்கும் ஸ்ருதிக்கும் ஓரளவுக்கு ரசிகர்கள் இருந்த நிலையில் பொய் மேல் பொய் கூறி பெயரை கெடுத்துக் கொண்டனர் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மேலும் பாவனி அடுக்கடுக்கான பொய்களை கூறிய பாவனிக்கு குறும்படம் போட்டே ஆக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read  அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' சீசன் 5…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!

Lekha Shree

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் Working Stills…! ரசிகர்கள் ஆர்வம்..!

Lekha Shree

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

Tamil Mint

விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

Lekha Shree

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் இது தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

HariHara Suthan

நாயகியாக அறிமுகமாகும் ஷங்கரின் மகள்..! வாழ்த்திய ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்..!

Lekha Shree

“சரவெடி தெறிக்க தெறிக்க” – வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல்…!

Lekha Shree

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

“காத்தாடி மேகம்” எஸ்.பி.பி.யின் மறைவுக்கு பின் வைரலாகும் மெலடி

sathya suganthi