இப்போ திறந்தா கூட வெளியில போவேன்.! எனக்கு வலு இருக்கு.! : அபிஷேக்கின் எல்லைமீறிய பேச்சால் கடுப்பான பிரியங்கா


“இப்போது கதவை திறந்தால் கூட நான் வெளியில் செல்வேன். வெளியே சென்று ஏதாவது செய்வேன். எனக்கு வலு உள்ளது” என அபிஷேக் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது பாகம் தற்போது மூன்றாவது வாரத்தில் தொடக்கத்தை எட்டியுள்ளது. வீட்டினுள் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில், நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு நாடியாச்சன் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது இந்த நிகழ்ச்சியை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று வெளியான புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்குபெறும் இசைவாணி, ராஜ், சிபி, பாவணி ஆகியோரை உணர்வுப்பூர்வமாக பேசி அவர்களை அசைய வைக்க வேண்டும். யார் செய்கிறார்களோ அவர்கள் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர்‌. இறுதிவரை யார் அசையாமல் நிற்கிறாரோ அவரே வெற்றியாளர்.

Also Read  எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 - வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!

இசைஞானியை அசைக்க வைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் முயற்சிக்கிறார்கள். அப்போது வருண், இசைவானி தனது குடும்பத்தைப் பற்றிக் கூறிய கதையை கிண்டலடிக்கும் தோணியில் ஒன்றைக் கூறுகிறார். இதனை கண்டித்து இமான் அண்ணாச்சி இசைவாணி வேறு ஏதாவது கூறி அசைய வைக்கும்படி சொன்னார். இதேபோலவே பாவணியை அசைக்க வைக்கும் முயற்சிலும் நடக்கிறது. இதனால் கோபமடைந்த அபிஷேக் அண்ணாச்சியை கடுமையாக பேசுகிறார். அதன்பின் இப்போது கதவை திறந்தால் கூட நான் வெளியில் செல்வேன். வெளியே சென்று ஏதாவது செய்வேன் எனக்கு வலு உள்ளது எனக் கூறுகிறார். இதனைக் கேட்ட சக போட்டியாளர் பிரியங்கா இப்படி எல்லாம் பேசக்கூடாது இது மிகவும் அதிகமாக உள்ளது என அபிஷேக்கை கண்டிக்கிறார். ஆனால், அபிஷேக் நான் அப்படிதான் பேசுவேன் என கூறிவிட்டு செல்கிறார்.

இந்தப் பதிவைப் பார்த்த பலர் அபிஷேக்கின் செயல் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Also Read  நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த குழந்தை!” – புனித் ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்..!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ‘தளபதி’ விஜய்?

Lekha Shree

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree

விஜய்யின் ’கத்தி 2’வை இயக்கும் வெற்றிமாறன்?.. லீக்கான கதை..!

suma lekha

“சும்மா ஸ்டைலா… கெத்தா…!” – இணையத்தில் வைரலாகும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் நியூ லுக்..!

Lekha Shree

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Tamil Mint

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

உலகநாயகனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

Lekha Shree