a

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!


7 ஆண்டு காலம் தன்னுடன் வாழ்ந்த மனைவியை, அவர் விரும்பும் காதலனுக்கே கணவன் திருமணம் செய்து வைத்த நிகழ்வு பீகாரில் அரங்கேறி உள்ளது.

சுல்தான்கஞ்ச் நகரைச் சேர்ந்தவர் உத்தம் மண்டல் என்பவருக்கும் சப்னா குமாரி என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்தவரும் உறவினருமான ராஜூ குமார் என்பவரை சப்னா சந்தித்து காதல்வயப்பட்டுள்ளார்.

இது குறித்து உத்தமுக்கு தெரிய வர, அதிர்ச்சி அடைந்த அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உறவினர்கள் முன்னிலையில் பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி சப்னாவுடன் வாழ உத்தம் முயற்சி செய்துள்ளார்.

Also Read  திருமணத்தில் புகுந்து கன்று ஈன்ற பசு! - வினோத சம்பவம்

ஆனால், சப்னா தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இறுதியில் வேறு வழியின்றி சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்ய உத்தம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துர்க்கை கோவில் ஒன்றில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவுக்கு 2வது திருமணத்தை கணவர் உத்தம் நடத்தி முடித்துள்ளார்.

மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தம் வாழ்த்து தெரிவித்த போதிலும், தனது மனைவி வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதனை கண்டு உத்தம் மண்டல் கண் கலங்கி உள்ளார்.

Also Read  கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் - மக்கள் அச்சம்!

இந்த செய்தி சுற்றுவட்டாரத்தில் வேகமாக பரவி பேசுப் பொருள் ஆன நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் கொரோனா – பொதுமுடக்கத்தை நீட்டிக்க அரசு முடிவு!

Lekha Shree

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!

Devaraj

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளம்!

sathya suganthi

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் உயிரிழப்பு! – யாருக்கும் சொல்லாமல் அடக்கம் செய்த உறவினர்கள்!

Shanmugapriya

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

Devaraj