a

65 வயதில் பில் கேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!


மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவர் வில்லியம் கென்ட்ரி பில்கேட்ஸ். இவர் 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

ஆரம்ப காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பில் கேட்ஸ், பின்னர் தலைவர், தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து காதல்வயப்பட்டு, பின்னர் அவரையே 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் பில்கேட்ஸ்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு கேட்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் தொடங்கினர்.

Also Read  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர்! - காரணம் என்ன தெரியுமா?

இந்த அறக்கட்டளை மூலம் லாபநோக்கு இன்றி கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பில்கேட்ஸ் தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Also Read  தீப்பிழம்பாக காட்சியளிக்கும் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர்…! வைரல் புகைப்படம் இதோ..!

கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம் என்றும். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து தந்துள்ளதாகவும் தம்பதி தெரிவித்துள்ளனர்.

இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம் என்றும் எனினும், தங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றும் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி... வைரல் வீடியோ...!

தங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நம்பிக்கை இல்லை எனவும் இருவரும் அறிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

மகுடத்தை பறித்த திருமதி உலக அழகி…! ஒரு வாரத்துக்கு பின் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

Devaraj

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj

28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! – அமெரிக்காவில் வினோதம்

Shanmugapriya

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரம்

Tamil Mint