மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்


அமெரிக்காவைச் சேர்ந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட். இதன் நிறுவனர் பில்கேட்ஸ் (65). இவரது மனைவி மெலிண்டா (56). இவர்கள் இருவரும் கடந்த 27 வருடமாக திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் பில்கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக அறிவித்தனர். அதன்படி 90 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பின் வாஷிங்டன் மாகாண கிங் நகர நீதிமன்றம் இவர்களுக்கு சட்டப்படி விவகாரத்து வழங்கியது.
வாஷிங்டன் நீதிமன்றம் வெளியிட்ட தகவலின்படி, கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெறும் போது சொத்து சரிசமமாகவோ அல்லது அவர்களுக்குள்ளோ பேசி பிரித்துக் கொள்ள வேண்டும். அதன்படி பில்கேட்சும், மெலிண்டாவும் தங்களுக்குள் சொத்துக்களை பிரித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதனால் சொத்து பிரிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
விவாகரத்து அறிவிப்பின் போது பில்கேட்சின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மெலிண்டா பெயருக்கு மாற்றப்பட்டன.
விவாகரத்து பெற்றாலும், பில் – மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் ஒன்றாக செயல்பட உள்ளதாக ஏற்கெனவே இருவரும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் 'மாஸ்' காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

மாயமான ரஷ்ய விமானத்தில் பயணித்த 28 பேரும் பலி…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

Tamil Mint

ஸ்காட்லாந்தில் உலாவும் பேய்க்கப்பல்! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

Lekha Shree

ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா மருந்து பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய WHO!

Lekha Shree

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

10 மாதத்துக்கு பிறகு 2வது டோஸ் போட்டா பெஷ்டு…! ஆய்வு முடிவில் தகவல்…!

sathya suganthi

புகலிடம் தேடிச் சென்ற அகதிகள் கடலில் மூழ்கி பலி…! 43 பேர் உயிரிழந்ததாக தகவல்…!

sathya suganthi

“பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும்” – தாலிபான்கள் அதிரடி பேட்டி..!

Lekha Shree

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree