தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை


பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நேரத்தில் பணம் அளிப்பது குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 

தமிழ்நாடு அரசு சமீபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இந்த அறிவிப்பை தமிழக பா.ஜ.க., வின் துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின.

Also Read  நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

மேலும் “தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2,000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல்” என்று அவர் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது.  இது தொடர்பாக அவர் பேசும் காணொளி  ஒன்றும் இணையத்தில் பரவிவருகிறது. 

இது குறித்து அண்ணாமலை, “நான் அப்படிச் சொல்லவில்லை. பொங்கலுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பதை ஆதரிக்கிறேன். ஓட்டுக்கு 2,000 ரூபாய் அளிக்கப்படுவதைப் பற்றித்தான் சொன்னேன்” என தெரிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்திலும் இதை விளக்கி பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.

Also Read  ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருக்கும் நிலையில், அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கடந்த சில நாட்களாக இரு கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்து விமர்சங்களுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…! புகைப்படங்கள் உள்ளே…!

sathya suganthi

தமிழக பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

சட்டப்பேரவையில் “விஜய் சேதுபதி” திரைப்படத்தை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க சைபர் க்ரைம் போலீசார் கடிதம்..!

suma lekha

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree

தி.நகர்,ரெங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க அனுமதியில்லை- சென்னை மாநகராட்சி அதிரடி

suma lekha

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint