மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


மேற்கு வங்கம், மிட்னாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய, அக்கட்சி மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தனர். 

அவர்களை வரவேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “2021 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா மட்டும் தனித்துவிடப்படுவார். மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும். மேற்கு வங்கத்திற்கு பிரதமர் அறிவித்த திட்டங்களை மம்தா தடுக்கிறார். 

Also Read  இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

மம்தா ஆட்சியில், மாநிலத்தில் வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. ஊழல், வன்முறை தலைவிரித்தாடுகிறது. மாநில அரசின் தவறான நிர்வாகத்தால், ஏழை மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்” என கடுமையாக சாடினார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  இந்தியா: கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்; சசி தரூர் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan

உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா…! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு…!

Devaraj

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!

Tamil Mint

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

2 டோஸ்களுக்கு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி போடலாமா? – மத்திய அரசு விளக்கம்

sathya suganthi

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

Lekha Shree

போலி கோழிமுட்டை விற்பனை… அதிர்ச்சி அடைந்த மக்கள்..! ஆந்திராவில் பரபரப்பு..!

Lekha Shree

இந்தியா – ஓய்கிறதா கொரோனா அலை? இன்றைய கொரோனா அப்டேட்!

Lekha Shree