“பிரதமர் திட்டங்களை மக்களிடம் சேர்த்த முதல்வருக்கு நன்றி!” – அண்ணாமலை ட்வீட்!


மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு சேர்த்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

தீபாவளியன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுமனை பட்டா மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் ரூ. 4.53 கோடி மதிப்பீட்டில் 282 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  "ஆணும் பெண்ணும் சமம் என்பதாலேயே சம அளவு வேட்பாளர்கள்" - சீமான்

இதுகுறித்த செய்திக்குறிப்பில், “முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் மொத்தம் 12 லட்சம் கடனுதவி மற்றும் சிறு தொழில் செய்வதற்கான வங்கி கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு ரூ. 10,000 வீதம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

Also Read  பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு! மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினி அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்!

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடைய அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்கு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Also Read  சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

தமிழக முதல்வர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புகின்றோம்!” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்: முதல்வர்

Tamil Mint

ரம்ஜான் திருநாள் – களைகட்டிய ஆன்லைன் பிரியாணி விற்பனை!

Lekha Shree

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

“சகிப்புத்தன்மை வேண்டும்!” – Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை..!

Lekha Shree

பொறியியல் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பட்டியல்

Tamil Mint

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

தமிழகம்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்…

suma lekha

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி – ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்

sathya suganthi

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

Devaraj