‘கொங்கு நாடு’ – டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்… என்ன காரணம்?


கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுகவும் பாஜகவும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவருகின்றன.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது கொங்கு மண்டலம். இதற்கு சான்றாக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களை கொங்கு மண்டலத்தில் தான் அதிமுக கைப்பற்றியது.

இந்த சூழலில் கொங்கு மண்டலத்தில் தங்களை பலப்படுத்தும் பணிகளில் திமுகவும் பாஜகவும் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே பாஜகவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன் எஸ்.ஆர்.சேகர், முருகானந்தம், கனகசபாபதி உள்ளிட்டவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Also Read  ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும் அண்ணாமலை மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற உடன் தமிழ்நாடு என குறிப்பிடாமல் கொங்கு நாடு என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

“ஒன்றிய அரசுக்கு பதிலடியா கொங்கு நாடு?” என பலர் கேள்வி எழுப்பினர். இதேபோல் திமுகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மகேந்திரனை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது.

தேர்தலுக்கு முன்னரே மகேந்திரன் திமுகவில் இணைந்து இருந்தால் கோவையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என்று வெளிப்படையாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கை குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, “கொங்கு மண்டலத்தில் பாஜக ஏற்கனவே வலுவாக இருக்கிறது. எல். முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுத்தது எதேச்சையாக நடை பெற்றதது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மிக வலுவான தலைவரை கொண்டு வரமுடியவில்லை. மீண்டும் அவர்களால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியுமா என்பது சந்தேகமே.

Also Read  ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்… நிறைவேறியதால் தீக்குளித்த நபர்… கரூரில் பரபரப்பு சம்பவம்!

தனிப்பட்ட முறையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. 2026ம் ஆண்டில் தனித்துப் போட்டியிட விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இப்படி பாஜகவும் திமுகவும் கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்வதாக எழுந்துள்ள விமர்சனங்களால் கொங்கு நாடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி – புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

sathya suganthi

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.!

suma lekha

பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தது எப்படி? – தேர்தல் ஆணையம் தந்த விளக்கம் என்ன?

Shanmugapriya

காவல்துறையின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள சென்ற நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார்

Tamil Mint

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

படு ஜோராக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறும் காளைகளை அடக்கும் வீரர்கள்!

Tamil Mint

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj