“நாளைய முதல்வரே” – அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்..!


பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை வரும் 16ம் தேதி பிற்பகல் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இதற்காக கோவையிலிருந்து 3 நாள் பயணமாக இன்று சென்னை கிளம்பினார். இன்றும் நாளையும் வழியெங்கும் உள்ள மாவட்டங்களில் அண்ணாமலைக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி - அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

சின்னியம்பாளையம், அவிநாசி, திருப்பூர், பெருந்துறை, சேலம் என பல்வேறு மாவட்டங்கள் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், நாளை மறுநாள்தாம்பரம் முதல் தியாகராயநகர் வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரை வரவேற்று பல்வேறு விளம்பர போஸ்டர்களை பாஜகவினர் ஒட்டி வருகின்றனர்.. அந்தவகையில் வடசென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “நாளைய முதல்வரே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக என இரண்டு கட்சிகள் சார்பில் சர்ச்சை கருத்துக்களை தவிர்க்க உத்தரவிட்டுள்ளனர்.

Also Read  திமுக கனவில் கூட சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் இது போன்ற போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சென்னையில் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை மீறி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

தமிழக பொருளாதாரத்தை சீராக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன: முதல்வர்

Tamil Mint

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

sathya suganthi

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,686 குழந்தைகள்…!

sathya suganthi

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு

Tamil Mint

வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

Tamil Mint

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

கனிமொழி Vs இந்தி மொழி: சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

Tamil Mint

தேவாங்கர் செட்டியார் சங்கக் கூட்டம் – ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு திரட்டிய மகன்…!

Devaraj