“ராகுல் காந்தி அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்!” – குஷ்பூ


நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ ட்விட்டர் தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால், கடந்த சில தினங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு ட்வீட்டும் இடம்பெறவில்லை.

இதனிடையே இன்று காலை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு ட்வீட்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.

Also Read  கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி! வைரலாகும் ட்விட்டர் பதிவு!

இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, “என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னுடைய கணக்கை தவறாக பயன்படுத்திவிடக்கூடாது” என கூறினார்.

அதன்பின்னர் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை பற்றி கேட்கும்போது, “பெகாசஸ் ஸபைவேரை வைத்து சமூக வலைதள பக்கத்தை உளவுபார்க்க முடியாது.

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தை அதை வைத்து உளவு பார்த்தாக கூறுகிறார்கள், ஆனால் அவரது பக்கத்தை உளவு பார்ப்பதால் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. அவரது அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்” என கூறினார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

Also Read  "லாட்டரிச் சீட்டு திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குஷ்பூ இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read  தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

sathya suganthi

“நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்” – செவிலியர்களின் காலில் விழுந்த டீன்!

Lekha Shree

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

மதுசூதனன் உடல்நலம் குறித்து சசிகலா நேரில் நலம் விசாரிப்பு…!

Lekha Shree

விடுதலைக்குப் பிறகு சொகுசு ஹோட்டலில் ஓய்வெடுக்கும் சசிகலா! ஏற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

மூன்று குரங்கு சின்னங்களாக சினிமா, ஊடகம், கல்வி இருக்காது – கமல்ஹாசன் ஆவேசம்

sathya suganthi

புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

Tamil Mint

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!

Lekha Shree

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint