பஞ்சாப் அரசை கண்டித்து தமிழக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..! பொன்.ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் கைது..!


பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.

இந்நிலையில் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Also Read  "முதலமைச்சரின் தொகுதியிலேயே படகில் செல்ல வேண்டிய நிலை" - அண்ணாமலை

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர் துரைசாமி, தேசியக் குழுவின் சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க எது வேண்டும் என்றாலும் செய்யும்” என்றார்.

Also Read  "ராகுல் காந்தி அக்கவுண்ட்டை ஹேக் செய்வது வேஸ்ட்!" - குஷ்பூ

இதை தொடர்ந்து பாஜகவினர் ஊர்வலமாக காந்தி சிலை வரை செல்ல முற்பட்ட போது போலீசார் அனுமதி தர மறுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Also Read  கோடநாடு வழக்கு: செல்வ பெருந்தகையை வம்பிழுத்த ஜெயக்குமார்! பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

அப்போது போலீசார் பாஜகவினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், ஒரு சில மணி நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் சிறைக்கு செல்வதை தவிர்க்க கொலை செய்து நாடகமாடிய கைதி…! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

Lekha Shree

அழியாத மனிதநேயம் – ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

Lekha Shree

மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

Devaraj

“முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை” – நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி

Shanmugapriya

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!

Lekha Shree

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

“எதிரிகளை வெல்ல ஒற்றுமை வேண்டும்!” – சசிகலா அறிக்கை

Lekha Shree

சொந்த மருத்துவ உபகரணங்கள் கொண்டு சிறுமியின் துண்டான விரலை ஒட்டவைத்த மருத்துவர்!

Tamil Mint

என்னை கொலை செய்து ஆட்சியைப் பிடிக்க திட்டமா? – மம்தா பானர்ஜி

Shanmugapriya

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

Lekha Shree