“மக்கள் விரும்பினால் மாநிலங்களை பிரிக்கலாம்!” – பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்


கொங்குநாடு விவகாரம் தொடர்பாக பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “மக்களின் எதிர்பார்ப்பு அவ்வாறாக இருந்தால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை” என தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Also Read  மெரினாவில் கருணாநிதி உடலடக்கத்துக்கு இடம் தராதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்...!

பின்னர் கொங்குநாடு விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நம்ம ஊர் பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது. மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.

அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவர்களுக்கு பயம்? பயமே தேவையில்லை. எல்லாம் தமிழகம் தான்.

Also Read  “அகில இந்திய கட்சி, இங்க வந்து அடிமைத்தனமா பிச்சை எடுக்கிறது கஷ்டமா இருக்கு” - சுப்ரமணியன் சுவாமி

ஆனால், ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். ஆந்திரா இரண்டாக பிரிந்து இருக்கிறது. உத்திரப்பிரதேசம் இரண்டாக பிரிந்து இருக்கிறது.

மாநிலங்களை இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

கொங்குநாடு தமிழகத்தில் தான் உள்ளது. அது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே ஒன்றிய அரசு என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கண்ணோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது” என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

sathya suganthi

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

Tamil Mint

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

காந்தியுடன் இணையும் ரஜினி மக்கள் மன்றம்? இது என்ன புது புரளியா இருக்கு?

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

வடசென்னையில் தொடரும் கஞ்சாவுக்கு எதிரான வேட்டை :500 கிலோ கஞ்சா பறிமுல் கூடுதல் கமிஷனர் அருண் அதிரடி

Tamil Mint

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree