பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது


அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெண் ஊடகவியாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிஷோர் கே.சாமியை போலீசார் கைது செய்தனர்.

பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி, ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கபவர்.

இவர், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது திமுக நிர்வாகி ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மேலும் பெண் ஊடகவியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Also Read  "தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!" - அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

இதையடுத்து, கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) – ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிஷோரை கைது செய்தனர்.

இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read  தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

கள்ளக்குறிச்சி இளம்பெண் கொலை சம்பவம்… நடந்தது என்ன?

Lekha Shree

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

கொரோனாவுடன் டெங்கு காய்ச்சலும் அதிகரிப்பு : 5 மாதங்களில் 2008 பேருக்கு பாதிப்பு

sathya suganthi

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது

Tamil Mint

சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

Tamil Mint

தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

sathya suganthi

கூடுதல் தளர்வுகள்… மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

Lekha Shree

ரயில்வே துறையிலும் வந்துவிட்டது தனியார் – 11 வழித்தடங்களில் இயக்கம்

sathya suganthi

உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்

Tamil Mint