a

அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்கு செல்ல உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை வெறும் 1,400 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

Also Read  அதிமுக எம்.பி முகமது ஜான் காலமானார்!

இந்த நிலையில், கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியை ஆக்கப்பூர்வமான வகையில் பெற முடியுமோ அந்த வகையில் எல்லாம் மாநில வளர்ச்சிக்குப் பங்காற்றுவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை மாநில அரசின் உதவியுடன் செய்வோம் என்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

ஏற்கனவே கூட்டணி அமைக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் தெரிவித்தது சர்ச்சையை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

Tamil Mint

வேகமாக புஷ் அப்ஸ் எடுத்து அசத்திய ராகுல் காந்தி! – வீடியோ

Shanmugapriya

முன்னாள் திமுக எம்எல்ஏ மரணம்

Tamil Mint

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

‘புரட்சித் தலைவி’ ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் இன்று

Tamil Mint

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

“தோட்டத்தில் தங்கப்புதையல்” ஆசைக்காட்டி ரூ.22 லட்சம், 45 சவரன் நகையை அபேஸ் செய்த ஜோசியர்…!

Devaraj

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint