a

கருப்பு பூஞ்சை நோய் – யாரை அதிகம் பாதிக்கும்?


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து மீண்டுவந்த பலபேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்த கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்பில் இருந்தே மீளாத மக்கள் இந்த புதிய தொற்றால் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை அறிகுறிகள்:

கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காது, தாடை பகுதிகளில் வலி மற்றும் வீக்கம் காணப்படும்.

Also Read  கோடை காலத்தில் கேசத்தை பராமரிக்க உதவும் 4 வகை எண்ணெய்கள்…!

இந்த பூஞ்சையானது வீட்டில் காற்றுப்புகாத பகுதிகளில், அழுகிய காய்கறிகளில், பழங்களில் காணப்படும். நாம் சுவாசிக்கும்போது அது சுவாச திசுக்களை பாதிக்கும்.

யாரை தாக்கும்?

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

ஸ்டீராய்டு மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களுக்கும், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, ஆர்த்தரைடீஸ் நோய் பாதிப்பு, சிறுநீரகம் போன்ற மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.

Also Read  கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும். அதை குறைக்க ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

Also Read  கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் - தமிழக அரசு

இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் நோயிலிருந்து மீண்டு விடலாம்.

இந்நொய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது அல்ல. காற்றிலேயே மியூக்கர்மைக்கோசிஸ் உள்ளது. நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிப்பதும் முகக்கவசம் அணிவதும் நன்மை பயக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சம்மர் ஃபுரூட் தர்பூசணியால் கிடைக்கும் 5 நன்மைகள்…!

Lekha Shree

அடர்த்தியான தலைமுடி பெற உதவும் மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

Lekha Shree

2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது – ஆய்வில் தகவல்!

Lekha Shree

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

ஆரஞ்ச் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

Lekha Shree

முகப்பொலிவுக்கு கொய்யா இலை! முழு விவரம் இதோ…!

Lekha Shree

முகத்தை பொலிவாக்கும் 3 சிம்பிள் ஃபேஸ் பேக்!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

Lekha Shree

வேர்க்குரு பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

காலையில் சாப்பிடக்கூடாத 6 உணவு வகைகள்…!

Lekha Shree

Zinc குறைபாட்டிற்கு சிறந்த உணவு வகைகள்…! லிஸ்ட் இதோ..!

Lekha Shree

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree