உடல் எடையை குறைக்க உதவும் ‘Blue Tea’..! தயாரிப்பது எப்படி?


இன்றைய காலகட்டத்தில் தேநீரில் பல வகைகள் வந்து விட்டது. அதில் நம் எல்லோருக்கும் ‘கிரீன் டீ’ என்றால் தெரியும். ஆனால், ‘Blue Tea’ தெரியுமா?

இதைத் தயாரிப்பது எப்படி மற்றும் இது நம் உடலுக்கு எந்த வகையில் நன்மை அளிக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் டீ, காபி போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள கிரீன் டீ தற்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தினமும் காலையில் க்ரீன் டீ பருகுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறி உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Also Read  சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கும். அதைப்போலவே நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் கொண்டது Blue Tea. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.

இதை தயாரிக்க சங்குப்பூ, தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய 3 பொருட்கள் இருந்தால் போதும். கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும்.

அதில் எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

இந்த பானத்தை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி பருகக்கூடாது.

Also Read  ஆரஞ்ச் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

இந்த Blue Tea, தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்ட கூடியது.

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த Blue Tea-ல் இருக்கும் ஃப்ளோவனாய்ட் என்ற ரசாயனம் புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிப்பதாக கூறப்படுகிறது.

Also Read  அமெரிக்கா வெளியேற்பும்.. தலிபான் ஆக்கிரமிப்பும்.. சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான்..!

அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது.

தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைக்கவும் குடற்புண் பாதிப்புக்கு உகந்த மருந்தாகவும் இந்த Blue Tea சொல்லப்படுகிறது.

உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் துணைபுரிகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது. குறிப்பாக இந்த Blue Tea மன அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுகள்..!

Lekha Shree

சம்மர் ஃபுரூட் தர்பூசணியால் கிடைக்கும் 5 நன்மைகள்…!

Lekha Shree

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்கள்? – உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

‘ஓமைக்ரான்’ – வேகமாய் பரவும் புதிய கொரோனா திரிபு… தற்போதுள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா?

Lekha Shree

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

Lekha Shree

சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

Lekha Shree

மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

ஒமிக்ரான் வைரசை தடுக்க தடுப்பூசி இருக்கு!!! ரஷ்யா நம்பிக்கை….

Lekha Shree

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளலாமா? WHO கூறுவது என்ன?

Shanmugapriya

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

வெயிட் லாஸ் பண்ண உதவும் தேங்காய் எண்ணெய்! இப்படி பயன்படுத்துங்கள்!

Lekha Shree