தூக்கில் தொங்கிய காதலன்…ஆற்றில் குதித்த காதலி…. ஆணவக்கொலையா என விசாரணை….


கள்ளக்குறிச்சி அருகே, வீட்டிலிருந்து மாயமான காதலர்கள் ஆற்றங்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

Also Read  தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சோமண்டார்குடி ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி மாணவரின் சடலமும், ஆற்றில் மிதந்தபடி மாணவியின் சடலமும் இருந்துள்ளது.

தகவலறிந்து சென்ற போலீசார், இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா, அல்லது கொலையா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  அண்ணன் உயிரிழந்த நிலையில் குழந்தை பெற்ற அண்ணியை கொலை செய்த மைத்துனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் கணவரை கத்தியால் குத்திய மனைவி : புடிச்சு ஜெயிலில் போட்ட போலீஸ்.!

mani maran

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

கேரள வரலாற்றில் முதல்முறை… விஸ்மயா வழக்கில் கைதான கணவர் பணி நீக்கம்…!

Lekha Shree

சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…!

sathya suganthi

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

sathya suganthi

பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை!!!

Lekha Shree

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

பாலியல் வன்கொடுமை வழக்கு: விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

குடிபோதையில் வேறொருவரின் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி…!

Lekha Shree

கோவை: பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…! ஆசிரியர் கைது..!

Lekha Shree

வினோத கொலை… மக்களே இனிமேல் யாரும் இந்த தவறை செய்யாதீர்கள்….

VIGNESH PERUMAL