தாயான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா..! வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள்…!


நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கானுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் பிரீத்தி ஜிந்தா.

அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்தார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனது நீண்டகால நண்பரான ஜீன் குட் இனாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read  தல, தளபதி குறித்து ஒரே வரியில் பதிலளித்த ரம்யா பாண்டியன்..!

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு, சிறப்பு தோற்றங்களில் மட்டும் நடித்து வந்தார்.

தற்போது பிரீத்தி ஜிந்தா மற்றும் ஜீன் குட் இனாப் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் விதமாக சமூக வலைதளங்களில், “அனைவருக்கும் வணக்கம். இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா ஜீன் குட் இனாப் மற்றும் கியா ஜிந்தா ஜீன் குட் இனாப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுடனும் மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகைத்தாய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

Also Read  முல்லை பெரியாறு அணை விவகாரம்..! நடிகர் பிரித்விராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அன்புடன்… ப்ரீத்தி, ஜீன், ஜெய், கியா” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அவர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஓடிடி இல்லை… திரையரங்குதான்!” – மோகன்லாலின் ‘மரைக்கார்’ படத்தின் வெளியீட்டை அறிவித்த அமைச்சர்..!

Lekha Shree

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bhuvaneshwari Velmurugan

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

விரைவில் சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி..!

Lekha Shree

கையில் குழந்தையுடன் நயன் மற்றும் விக்கி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

சர்ச்சையில் சிக்கிய ரஜினியின் ரீல் மகள்…!

Lekha Shree

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்ரமணியன் சுவாமி சாடல்

Tamil Mint

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய கர்நாடக அரசு

Lekha Shree

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்த ஆபாச பதிவு… பேராசிரியர் கைது!

Lekha Shree