“நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன்!” – புல்லி பாய் செயலியை உருவாக்கிய இளைஞர் நீரஜ்..!


முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி சர்ச்சைக்குள்ளான புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் போலீஸ் விசாரணையின் போது தனது செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் தான் சரி என நினைத்ததை தான் செய்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போபாலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படிக்கும் மாணவர் நீரஜ் (21). அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இருந்து புல்லி பாய் செயலியை உருவாக்கி சர்ச்சையான வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Also Read  நர்சிங் கல்லூரி தாளாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! தலைமறைவாக உள்ளவரை பிடிக்க 5 தனிப்படைகள்..!

நீரஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் இந்த செயலி உண்மையில் நவம்பரில் உருவாக்கப்பட்டது என்றும் டிசம்பர் 31ஆம் தேதி பொதுவெளியில் பரவியது என்றும் அதன்பின் மும்பை காவல் துறையை கேலி செய்ய பயன்படுத்திய டுவிட்டர் பக்கத்தையும் நீரஜ் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

புல்லி பாய் செயலி தொடர்பாக 19 வயதான ஸ்வேதா சிங், விஷால் குமார் ஜா மற்றும் மயங்க் ராவல் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த டுவிட்டர் பக்கத்தில் “தவறான நபரை கைது செய்துள்ளீர்கள்.. ஸ்லம்பாய் போலீஸ்… புல்லி பாய் செயலியை உருவாக்கியவன் நான் தான்… நீங்கள் கைது செய்த இரண்டு அப்பாவிகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விரைவில் விடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

Also Read  குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..! பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

முஸ்லிம் பெண் பத்திரிக்கையாளர் மற்றும் ஆர்வலர்களை குறிவைத்து ஆன்லைனில் இழிவாக அவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட புல்லி பாய் செயலி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஹாட்ரிக்’ சாதனை! – இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

Lekha Shree

இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம்! உறவினர்கள் கதறல்..!

Lekha Shree

5 மாநில தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!

suma lekha

கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

Tamil Mint

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

கொரோனா எதிரொலி – திருப்பதி தேவஸ்தானத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா?

Lekha Shree

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை…! மத்திய அரசு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல்…!

sathya suganthi

டிஎன்பிஎஸ்ஸி போல் இராணுவத்திலும் ஊழலா….! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….

VIGNESH PERUMAL

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை…. 2 பேர் கைது…

VIGNESH PERUMAL

பணமோசடி வழக்கு – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது..!

Lekha Shree

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya