Bulli Bai ஆப்பில் ஏலம் விடப்பட்ட இஸ்லாமிய பெண்கள்… பின்னனியில் 21 வயது மாணவர்..!


வடஇந்தியாவில் இஸ்லாமிய பெண்களை இழிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் Sulli என்பது ஆகும். இதை அடிப்படையாக வைத்து Sulli Deals என்ற செயலி உருவாக்கப்பட்டது. இது இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலி ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு Sulli Deals செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.

பொதுவாக இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். யூசர் ஒருவர் இதை லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கூறும். அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? இதைத்தான் முதலில் Sulli Deals என்ற பெயரிலும், இப்போது Bulli Bai என்ற பெயரிலும் கொடூர கும்பல் ஒன்று நடத்தி உள்ளது.

Also Read  Sulli Deals செயலியை உருவாக்கிய ஓம்காரேஷ்வர் தாக்கூர் கைது..!

இந்த நிலையில் டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் Bulli Bai செயலி தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.

Bulli Bai App News After Sulli Deals Now Bulli Bai App... - MCE Zone


டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (முஸ்லிம்) தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்துள்ளார். புகாரின் நகலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆன்லைன் செய்தி இணையதளத்தில் பணிபுரியும் அந்தப் பெண் பத்திரிகையாளர், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் “முஸ்லிம் பெண்களைத் துன்புறுத்தவும் அவதிக்கவும் முயல்கிற” அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

புல்லிபாய் (bullibai.github.io) என்ற இணையதளம்/போர்ட்டலில் என்னைப் பற்றிய தவறான, ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் ஆபாசமான சூழலில் எனது படம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு உடனடி நடவடிக்கை தேவை, ஏனெனில் இது என்னையும் அதேபோன்று இருக்கும் மற்ற சுதந்திரமான பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் துன்புறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நிதி - 27 வயது இளைஞரின் தாராள மனசு
After 'Sulli Deals', Indian Muslim Women Listed For Auction On 'Bulli Bai'  App And There Isn't Enough Outrage - Culture

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள டெல்லி காவல்துறை, இந்த விவகாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை மும்பை போலீஸ் ஒரு பக்கம் தீவிரமாக விசாரித்து வந்தது. மும்பை போலீஸ் சார்பாக அந்த Bulli Bai செயலியின் ட்விட்டர் பக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அதன் ஐபி அட்ரஸ் கண்டுபிடிப்பட்டது. இந்த ஐபி அட்ரஸ் பெங்களூரை சேர்ந்தது. இதையடுத்து உடனடியாக பெங்களூர் சென்ற போலீசார் இந்த ஆப்பை நடத்தி வந்த நபர்களில் ஒருவரை கைது செய்தனர். அந்த நபர் 21 வயதே ஆன கல்லூரி மாணவர். இவர் பெங்களூரில் சிவில் என்ஜினியரிங் படித்து வருகிறார். இவரும் ஆப்பை நடத்தியவர்களில் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இவரின் பெயரை வெளியிட்டால் அது சிக்கலாகிவிடும். விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் மட்டும் தனி ஆளாக இருந்து இந்த செயலியை நடத்தவில்லை. இவர் பின் வேறு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

யமுனை: ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

ஆக்சிஜன் சிலிண்டர் களுடன் ஆட்டோ! – கொரோனா நோயாளிகளுக்கு உதவ டெல்லியில் அசத்தல்!

Shanmugapriya

தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா நடிகர் காளிதாசுக்கு எழுதிய கடிதம்…!

Lekha Shree

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

வாட்ஸ் அப் யூசர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி கும்பல்…!

Lekha Shree

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!

mani maran

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு சூப்பர் சலுகை அறிவித்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள்..!

Lekha Shree

ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை : பிரதமர் மோடி பாராட்டு

suma lekha

“கட்டுப்பாடுகள் எல்லாம் சமாஜ்வாதி கட்சிக்கு மட்டும்தானா?” – தேர்தல் ஆணையத்திடம் அகிலேஷ் கேள்வி..!

Lekha Shree

வீட்டை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கி சூடு…. கணவன் கைது….

VIGNESH PERUMAL