பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட் வைத்து இப்படியும் ஒரு மோசடி…!


நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதில் மோசடி நடப்பது தெரிய வந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி என பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தினார்.

இந்த வாக்குறுதி நடைமுறைக்கு வந்ததும், மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கு உடன் பயணிக்கும் ஒரு நபர் ஆகியோருக்கு இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டது.

அதற்காக நான்கு வகையாக டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தை சில நடத்துனர்கள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தவும் ஆரம்பித்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Also Read  12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

சேலம் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ் ஒன்றை டிக்கெட் பரிசோதகர்கள் நிறுத்தி பரிசோதனை செய்தனர்.

அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 21 ஆண் தொழிலாளர்களின் கைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் இருப்பதை டிக்கெட் பரிசோதகர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Also Read  "தமிழ்கூறும் நல்லுலகம்": சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது நடத்துனர் இந்த டிக்கெட்டுகளை தங்களுக்கு கொடுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 6 ரூபாய் வீதம் வசூல் செய்ததாக கூறியுள்ளனர்.

அவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது இலவச டிக்கெட் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடத்துநர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இதுகுறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட நடத்துனர் நவீன் குமார் என்பவர் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!

Lekha Shree

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விலகிய இருவர்…! காரணம் இதுதான்!

Lekha Shree

டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? – தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!

Lekha Shree

முடிவுக்கு வந்த காங். பஞ்சாயத்து…! சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடாவானார் விஜயதரணி…!

sathya suganthi

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!

Lekha Shree

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree

நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

Devaraj

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan