மூன்றரை லட்சம் பில் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்!!! பெங்களூரு ரிசார்ட்டில் மோசடி….


பெங்களூரூ ரிசார்ட்டில் தங்கிவிட்டு ரூ 3.5 லட்சம் பில்லை செட்டில் செய்யாமல் சென்ற தொழிலதிபரை போலீஸ் தேடி வருகிறது.

ஆந்திர மாநிலம் புட்டபத்திரியைச் சேர்ந்த ராஜேஷ், கடந்த ஜூலை மாதம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை ரூ7850 என கூறப்பட்டுள்ளது. அதற்கு சம்மதம் தெரிவித்து அவர் அந்த ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.

Also Read  ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் மூலம் இமெயில் ஐடி திருட்டு - மத்திய அரசு எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை இவர் தான் தாங்கியதற்கு சரியாக கட்டணம் செலுத்தியுள்ளார்.  8 லட்சம் ரூபாய் வரை பில் கட்டியதால் ரிசார்ட் நிர்வாகத்திற்கு ராஜேஷ் மீது சந்தேகம் வரவில்லை. இவரை தொடர்ந்து ஓட்டலிலேயே தங்க சம்மதித்துள்ளது. தன்னை ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்றும், தனக்கு பெங்களூரு மற்றும் ஆந்திராவில் சொந்தமான பல இடங்கள் உள்ளது. அதை பிளாட் போட்டு விற்கவே பெங்களூருவில் தங்கியிருப்பதாக கூறியுள்ளார். இவர் அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வருவது வழக்கம்.

இப்படி கடந்த நவ. 11ம் தேதி ரிசார்ட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்ப வரவேயில்லை. அவர் கொடுத்த செல்போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம் அவரது ரூமை திறந்து பார்த்த போது அதில் அவர் பொருட்கள் எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தான் ரிசார்ட் நிர்வாகம் ஏமாற்றமடைந்ததை அறிந்து தற்பாது அவர் செலுத்த வேண்டிய தொகையை கணக்கிட்டனர் அதில் ரூ3 லட்சம் பாக்கி இருந்தது. இதையடுத்து ரிசார்ட் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா

Tamil Mint

கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

Lekha Shree

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது – சபாநாயகர் அறிவிப்பு!

Lekha Shree

2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது! முழு விவரம் இதோ.!

Tamil Mint

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree

காசு.. பணம்.. துட்டு.. மணி, மணி… ஒரே நாளில் லட்சாதிபதியான நபர்.!

suma lekha

கிரிமினல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ரெட்டி? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree