கனடாவில் வாட்டி வதைக்கும் வெயில் – இதுவரை 486 பேர் உயிரிழப்பு…!


உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்றான கனடாவில், வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வரலாறு காணாத இந்த வெப்பத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் - அதிரவைக்கும் தகவல்கள்

அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர்.

Also Read  கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்...!

கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

வவ்வாலில் இருந்து இப்படிதான் கொரோனா வைரஸ் தோன்றியதா? – புதிய வீடியோ ஆதாரம்

sathya suganthi

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

நான் ஒரு ஏலியனை காதலிக்கிறேன் – சர்ச்சையைக் கிளப்பும் பெண்ணின் பேச்சு

Shanmugapriya

உலகின் காஸ்ட்லியான பர்கர்… விலை என்ன தெரியுமா?

Lekha Shree

ஆப்கனில் அதிகரித்துவரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள்

Tamil Mint

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint

சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை சீனா ஏற்க வாய்ப்பில்லை- சீன அரசு பத்திரிக்கை தகவல்

Tamil Mint

உலகிலேயே அதி வேக இணையசேவை கொண்ட நாடு எது தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா தாயார்..

VIGNESH PERUMAL

அதிபர் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ட்விட்டருக்கு தடை விதித்த அரசு!

Lekha Shree