ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!


14வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் ரசிகர்கள் இல்லாமலும் நடைபெற்றுக்கொண்டுள்ளது ஐபிஎல் போட்டிகள்.

இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவிருந்தன. ஆனால், அந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பெங்களூரு-கொல்கத்தா இடையிலான போட்டியை தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைத்தது பிசிசிஐ.

அதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரிக்கும் கிளீனர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  "ஆறு அடிக்கு மேல் கூட கொரோனா பரவலாம்" - அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

மேலும், டெல்லி மைதானத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இவ்வாறு ஒரே நாளில் இதனை பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாலும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த அறிவுறுத்தி ட்விட்டரில் Cancel IPL என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா இருப்பதாக தவறாக காட்டிவிட்டது எனவும் மீண்டும் நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி – பெங்களூரு இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

சென்னை அணி தோல்விக்கு தோனி காரணம்?

Jaya Thilagan

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

Devaraj

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி

Jaya Thilagan

ஐபிஎல் சேசிங்கில் வீரர்கள் தடுமாறுவது ஏன்?

Lekha Shree

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டாவது வீரருக்கு கொரோனா உறுதி!

Jaya Thilagan

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan

வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை – ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

Jaya Thilagan