சாய்னா குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத்தில் வழக்குப் பதிவு!


பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சை ட்வீட் செய்த நிலையில் அவர் மீது ஹைதராபாத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த சாய்னாவின் பதிவுக்கு, சித்தார்த் சர்ச்சை ட்வீட் செய்திருந்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார் நடிகர் சித்தார்த்.

Also Read  தமிழ் கற்க முடியாதது வருத்தமளிக்கிறது... பிரதமர் மோடி

நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து அதற்கு பதிலளித்த சாய்னா, “நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடவுள் சித்தார்த்தை ஆசிர்வதிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி கே.வி.எம். பிரசாத், “சாய்னா நேவால் குறித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகாரளித்துள்ளார். அதன் பேரில் சித்தார்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ” என கே.வி.எம். பிரசாத் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா அச்சம்: குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

“காஷ்மீரில் எப்போது கருப்புப் பனி பெய்யும்?” – குலாம் நபி ஆசாத் நையாண்டி!

Tamil Mint

இத்தனை வகை வண்ணத்துப்பூச்சிகளா…! – சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் நியூஸ்…!

Devaraj

என்னா அடி…! காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree

நான்கு குட்டிகளை மீட்பதற்காக இறந்த பூனைக்கு அறுவை சிகிச்சை செய்த நபர்!

Shanmugapriya

இறந்த தாய் உடலருகே குட்டி யானை பாசப்போராட்டம்… கேரளாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

தமிழகம் தேச விரோதிகளின் கூடாரம், திமுகவை போட்டுத்தாக்கிய பாஜக தேசிய தலைவர்

Tamil Mint

பாகிஸ்தான் பெண் ஏஜென்டிடம் மயங்கி இந்திய ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அதிகாரி!

Lekha Shree

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint