வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, சட்டமன்றத் தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்று உள்ள நிலையில், தொண்டர்களிடையே செல்போனில் பேசி வரும் சசிகலா, விரைவில் அரசியலுக்கு திரும்ப உள்ளதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில், அவர் மீது விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், தான் வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகவும் அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாக, அநாகரிகமாக பேசி பதிவிட்டும் வருகிறார்கள் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

Also Read  ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

மேலும் செல்போனிலும் தன்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர் என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும் என குறிப்பிட்டுள்ள அவர், எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், தன் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  "மக்கள்தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது!" - யோகி ஆதித்யநாத்

இந்த புகாரின்படி வி.கே.சசிகலா உள்பட 501 பேர் மீது 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி. சட்டம்)-தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உறுதியானது அதிமுக – பாமக கூட்டணி! – பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

Shanmugapriya

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

Tamil Mint

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

தமிழில் வழிபாடு நடந்தால் அரை நிர்வாணத்தோடு அலகு குத்தி முருகன் வழிபாடு செய்ய நான் தயார் – ஆ.ராசா!

Tamil Mint

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

கடன் சுமை: ஒருவயது குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை

Devaraj

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

போராடி மறுபிறவி எடுத்தேன்: கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் உரை

Lekha Shree

திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை

Tamil Mint