சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…!


செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சாத்தங்குப்பம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த இவர் 30 வருடங்களுக்கு முன்பு பிழைப்புதேடி சென்னை வந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஆன்மிக சொற்பொழிவின் மூலம் பிரபலமானார்.

கேளம்பாக்கம் அருகே சுஷில் என்ற பக்தர் வழங்கிய நிலத்தில், ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தனக்கான ஆடம்பர நகரையே உருவாக்கினார்.

64 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் தனக்கான அந்தரங்க ஆடம்பரமான கண்ணாடி மாளிகை, 300 குடும்பங்கள் தங்கும் அளவிற்கு வசதிகள், அத்துடன் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்ற ஆசிரம பள்ளியை நிறுவி உள்ளார்.

Also Read  காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக்கொள்ளும் சிவசங்கர்பாபா தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் போது ஆனந்த நடனம் ஆடுவது மிக பிரபலம்.

இந்நிலையில் தான் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் செய்த பாலியல் அத்துமீறல்கள் வெளிவந்தன.

அதை தொடர்ந்து சுஷில்ஹரி பள்ளியில் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா கொடுத்த பாலியல் அத்து மீறல்களும் வெளிவர தொடங்கின.

சுஷில் ஹரி ஆசிரம பள்ளியில் படித்த சில முன்னாள் மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை தற்போது பகிர்ந்துள்ளனர்.

ஆசிர்வாதம் என்ற பெயரில் மாணவிகளை தனித்தனியாக தனது அந்தரங்க அறையில் மறைமுகமாக சந்திக்கும் சிவசங்கர்பாபா மாணவிகளின் உடல்பாகங்களை அருவருக்கதக்க வகையில் தொட்டு தனது பாலியல் வக்கிரங்களை செயல்படுத்துவார் என்று கூறுகின்றனர் முன்னாள் மாணவிகள்.

முன்னாள் மாணவிகளின் தொடர் புகார்களை தொடர்ந்து மாநில குழந்தைகள் நல உரிமைகள் ஆனையம் தனது விசாரணையை தொடங்கியது.

Also Read  சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி பரிந்துரை…!

முதற்கட்டமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினார்.

அடுத்தநாள் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் கௌரி அசோகன் நான்குபேர் கொண்ட குழுவுடன் விசாரணை நடத்தினார்.

அத்துடன் ஐந்து மாணவிகள் ஆணைய அதிகாரிகளிடம் ரகசியமாக சில வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஆறு பேருக்கு குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவுசெய்து கடந்த 11 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜர் ஆக உத்தரவிட்டது.

Also Read  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு?

பள்ளியின் நிர்வாகி மட்டும் ஆஜரான நிலையில் சிவசங்கர் பாபா டேராடூனில் இருப்பதாகவும் அவருக்கு இதய அறுவைசிகிச்சை செய்ப்பட்டுள்ளதால் ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

Tamil Mint

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!

Lekha Shree

அதிமுகவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Tamil Mint

விஜய்சேதுபதி குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச விமர்சனங்கள்

Tamil Mint

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

சென்னையில் வலம் வரும் கொரோனா தடுப்பூசி ஆட்டோ!

Shanmugapriya

கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது – அமைச்சர் துரைக்கண்ணு.

Tamil Mint

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint

பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

sathya suganthi

சபாநாயகர் என்னுடைய கோரிக்கையை ஏற்கவில்லை: ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

Tamil Mint