முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு – தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?


முந்திரித் தோட்டத் தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ரமேஷ் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் பனிக்குப்பத்தில் உள்ள கடலூர் திமுக எம்.பி. ரமேஷ்-க்கு முந்திரி தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கோவிந்தராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் நடராஜ், தொழிலாளிகள் சுந்தர், வினோத், கந்தவேல், அல்லாபிச்சை ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் 302, 201,149, 120b, 147, 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Also Read  என்.டி.ஆருக்கு 'பாரத ரத்னா' விருது கோரும் சிரஞ்சீவி…!

அதையடுத்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நடராஜ், கந்தவேல், சுந்தர், அல்லாபிச்சை, வினோத் ஆகிய 5 பேரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திமுக எம்.பி. ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவல்லி முன்பு சரணடைந்தார் ரமேஷ் எம்.பி.

Also Read  அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

இந்த வழக்கின் விசாரணையின் இறுதியில் பண்ருட்டி நீதிமன்றம் திமுக எம்.பி. ரமேஷை அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ரமேஷ் இன்று நீதிமன்றத்தில் அராஜராகியுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  தமிழகத்தில் பள்ளி, தியேட்டர் திறப்பு? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்!” – கனிமொழி எம்.பி. அதிரடி பதில்..!

Lekha Shree

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தல்..!

Lekha Shree

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை – சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை

sathya suganthi

இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாஜக அதிருப்தி

Tamil Mint

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

Lekha Shree

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

suma lekha