சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்


இந்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ வகுப்புகளுக்கான தேர்வு தேதி உள்ளிட்ட விவரங்கள், cbse.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் தங்களுடைய செயல்முறை தேர்வுகள், எழுத்துத் தேர்வுகள் போன்ற விவரங்களை அதில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Also Read  150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! - வைரலாகும் புகைப்படங்கள்

இது தொடர்பான அறிவிப்பை இன்று (டிசம்பர் 31) டெல்லியில் அறிவித்தார் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்த நிகழ்வு, அவரது சமூக ஊடக பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “கொரோனா பொது முடக்கம் மற்றும் வைரஸ் பரவல் காரணமாக, மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு 12 சதவீதமும், 12ஆம் வகுப்புக்கு 30 சதவீதமும் பாடமுறை குறைக்கப்பட்டிருக்கிறது” என்றும் அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.

Also Read  தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் – சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி

Tamil Mint

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya

தலைநகரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்..கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு..!

suma lekha

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

டேக்சி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு..!

Lekha Shree

“இந்த ஆப்பர் நல்லா இருக்கே!” – சோப்ரா என்ற பெயருள்ளவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

தலையணையால் முகத்தை அமுக்கி கொலை..! முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மரணத்தில் திடுக்கிடும் தகவல்…!

sathya suganthi

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint