பிரதமர் பயணத்தில் விதிமீறல்: பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்பு..!


பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்த போது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டது தொடர்பாக மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹூசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாத போது, சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு அவர் செல்வார் என முடிவு செய்யப்பட்டது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!
Punjab Election 2022 Live Updates: Pm Modi Ferozepur Rally Cancelled Due To  Bad Weather And Farmers Protest News In Hindi - Pm Modi Punjab Rally Live:  फिरोजपुर में पीएम की रैली रद्द,

இதற்கு 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தேவைப்படும் பஞ்சாப் காவல் துறையின் தலைமை இயக்குனரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்ட பின், அவர் சாலை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்த போது, போரட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டது. மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.

Also Read  ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின் படி, போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும்.

இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பின் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது” என்று இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.

Also Read  பாராலிம்பிக்: இந்தியாவிற்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் சிங்கப்பெண்.!

இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா: சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி…!

Lekha Shree

மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

Devaraj

Double Mask அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாமா…!

Devaraj

இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

“விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி” – முழு விவரம் இதோ…!

sathya suganthi

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்..!

Lekha Shree

“கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட வரன் தான் வேண்டும்” – திருமண டிமாண்ட் பட்டியலில் சேர்ந்தது கொரோனா தடுப்பூசி!

sathya suganthi

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பக்தர்களுக்கு இலவச தரிசனம்!

suma lekha

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree