பெகாசஸ் உளவு விவகாரம் – மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுப்பு..!


பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

Also Read  மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில், இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.

Also Read  வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

இதுதொடர்பாக பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணையின் போது முன்னதாக பெகாசஸ் விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களை மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்துள்ளது.

Also Read  'காதல் கோட்டை' பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி கலவரத்தில் எங்களை தாக்கியது அடியாட்கள் தான்… விவசாயிகள் இல்லை… போலீசார் அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா 3ம் அலை? குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

திமுகவுடன் இணையுமா தேமுதிக?

Tamil Mint

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree

கோவாக்சினில் பசுவின் ரத்தம் கலக்கப்படுகிறதா? – மத்திய அரசு விளக்கம்

Shanmugapriya

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

“நாம் தமிழர் கட்சியை நான் தமிழர் கட்சியாக மாற்றி விட்டார் சீமான்” – சுப. உதயகுமார்

Shanmugapriya

“தமிழக முதல்வரின் நற்பெயரை கெடுக்கவே ஓபிஎஸ் தவறான தகவல்களை கூறுகிறார்” – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Lekha Shree