a

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்


மதுரையில் மத்திய பொதுப்பணித்துறை அலுவலக நிர்வாகப் பொறியாளராக பணிபுரிபவர் பாஸ்கர்.

இவர் மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் எழுந்த நிலையில், செல்போன் அழைப்புகளை டிராக் செய்து சிபிஐ போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகியோர் தங்களுக்கு வர வேண்டிய பில் பணத்தையும், ஜிஎஸ்டி பணத்தை திரும்ப தருமாறும் பாஸ்கரிடம் கேட்டிருந்தனர்.

அதற்கு லஞ்சம் தர வேண்டும் என்றும், லஞ்சப் பணத்தை வீட்டிற்கு வந்து தருமாறும் பாஸ்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனா விதிமுறை மீறல் - நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

இந்த தகவலறிந்த சிபிஐ எஸ்பி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி தண்டபாணி தலைமையில் சிபிஐ போலீஸார் பாஸ்கரன் வீ்ட்டை சுற்றி வளைத்து கண்காணித்து வந்தனர்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஒப்பந்ததாரர்கள் இருவரும் மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள பாஸ்கரின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று லஞ்சப்பணம் ரூ.70 ஆயிரத்தை பாஸ்கரிடம் கொடுத்தனர்.

Also Read  தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில், இன்று(ஜன.,2) கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும்

அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ போலீஸார் பாஸ்கர் மற்றும் அவருக்கு லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர், பாஸ்கரின் அலுவலகத்தில் சோதனை நடத்தி ஒப்பந்ததாரர்களிடம் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.1.85 லட்சத்தை கைப்பற்றினர்.

Also Read  சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

பாஸ்கர் உள்ளிட்ட 3 பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!

Devaraj

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint

வருகிற 30ந்தேதி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டர் பேரணி ஒன்றை நாங்கள் நடத்த இருக்கிறோம் – டெல்லி விவசாயிகள்

Tamil Mint

தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

Devaraj

யாரை கலாய்த்தார் நடிகை கஸ்தூரி?

Tamil Mint

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Mint

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு ஏன்? எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளக்கம்.

Tamil Mint

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint