a

“கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து” – ட்விட்டரின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு!


இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. ட்விட்டர் நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியது கவலை அளிக்கிறது என்றும் பொது தளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் உரையாட குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தது ட்விட்டர் நிறுவனம்.

முன்னதாக, பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா காங்கிரஸ் பிரதமர் மோடியின் நல்ல பிம்பத்தை கெடுக்கும் விதமாக கொரோனா சூழலை கையில் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

Also Read  இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

மேலும், கோவிட் டூல்கிட் ஒன்றை உருவாக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடியை பற்றி அவதூறு பரப்ப முனைந்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் இந்தியா அந்த டூல்கிட்டை சித்தரிக்கப்பட்ட செய்தி என கூறியது. அதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

டுவிட்டரில் பதிவான கோவிட் டூல்கிட் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நேற்று டெல்லி போலீஸின் ஸ்பெஷல் செல் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த டூல்கிட் தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பத் வெளியிட்ட ட்வீட் ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி என ட்விட்டர் நிறுவனம் கூறியதன் ஆதாரங்களை தருமாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது.

Also Read  தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

இந்நிலையில் இரண்டு போலீஸ் டீம்கள் டெல்லியின் லாடோ சராய் மற்றும் குருகிராமில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்தது. தற்போது அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது மத்திய அரசு.

Also Read  விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! - சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

இதுகுறித்து தெரிவிக்கையில், “கருத்து சுதந்திரம், ஜனநாயக நடைமுறையில் இந்தியாவிற்கு புகழ்பெற்ற பாரம்பரியம் உள்ளது” என தெரிவித்துள்ளது மத்திய அரசு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

எல்லைப் பிரச்னை: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை

Tamil Mint

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi