ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?


இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் இந்தியர்களை, ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் போன்று சமமாக நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் தற்போதய நிலைப்படி 4 வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஃபைசர் , மாடர்னா, லண்டன் வகை ஆஸ்டர்செனகா, ஜான்சனன் ஜான்சன் வேக்சின் ஆகிய வேக்சின்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 4 வேக்சினை போட்ட வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு ஐரோப்பாவில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும்.

Also Read  Battlegrounds Mobile India: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!

இந்த லிஸ்டில் இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்ட் இடம்பெறவில்லை. கோவிஷீல்ட் வேக்சின், ஆஸ்டர்செனகா வேக்சின் என்றாலும் கூட, அதன் லண்டன் உற்பத்திக்கு அனுமதி அளித்துவிட்டு, சீரம் நிறுவன உற்பத்திக்கு ஐரோப்பா அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் இந்தியர்களை, ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் போன்று சமமாக நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Also Read  கோமாளி போல வேடமணிந்து மும்பையில் கொரோனா விழிப்புணர்வு!

இது குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டெல்லியில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி நாடுகளில் 10-வதாக நெதர்லாந்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் இந்தியாவின் இந்த கோரிக்கையை பல ஐரோப்பிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read  சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

இதனால் கோபித்துக்கொண்டு இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாற்று திறனாளிகளுக்கான 40% பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு

Tamil Mint

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிபட்ட இளைஞர்… காரணம் அறிந்து ஷாக் ஆன மருத்துவர்கள்..!

Lekha Shree

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi

Cheer4India : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீர‌ர்களை ஊக்குவிக்க ஹேஷ்டேக்…!

sathya suganthi

பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது! – விஜயகாந்த்

Shanmugapriya

கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

Lekha Shree