தமிழகத்தில் 3 மாவட்டங்களை அச்சுறுத்தும் “டெல்டா பிளஸ்” – மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு


தமிழகத்தில், ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்புவிற்கு, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ்புஷன் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி வரும் நிலையில், அதன் விபரத்தை, மத்திய சுகாதாரத் துறை தெரியப்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.

Also Read  மினி லாக்டவுனுக்கு வாய்ப்பு…! பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

தற்போது டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றும் நுரையீரலை கடுமையாக பாதித்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வைரஸ், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ராஜேஷ் புஷன் இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Also Read  மநீம 4-ம் ஆண்டு விழா; பிரம்மாண்ட மாநாடுடன் களமிறங்கும் கமல்!

அந்த 3 மாவட்டங்களிலும் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்,

கடிதம் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை, கூடுதலாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.

Also Read  அமலுக்கு வந்தது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வு...!

தமிழகத்தை போன்றே, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி உள்ள குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

காங்கிரஸ் கட்சிக்கு 15+1 அல்லது 20+0?திமுகவின் புதிய ஆஃபர்

Tamil Mint

அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Tamil Mint

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

Lekha Shree

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

Tamil Mint

ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தி திணிப்பா? புதுக்கோட்டையில் பரபரப்பு

Tamil Mint

ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

sathya suganthi

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree