கிரிக்கெட் வீராங்கனையாக அனுஷ்கா ஷர்மா..கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!


பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ (Chakda Xpress) படத்திற்கான அனுஷ்கா ஷர்மாவின் தோற்றம் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலான் கோஸ்வாமியாக அனுஷ்கா ஷர்மா ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்துள்ளார். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பெண் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜுலான், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக பெண் வெறுப்பு அரசியல் மற்றும் எண்ணற்ற தடைகளை மீறி எப்படி வெற்றி பெற்றார் என்ற அற்புதமான பயணத்தை இந்த திரைப்படம் விவரிக்கிறது.

Also Read  'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனரை பாராட்டிய நயன்தாரா…!
Anushka Sharma to play Jhulan Goswami in cricketer's biopic Chakda 'Xpress  on Netflix

அனுஷ்கா மற்றும் அவரது சகோதரர் கர்ணேஷ் ஷர்மாவின் க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ப்ரோசித் ராய் இயக்கிய “சக்தா எக்ஸ்பிரஸ்” திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்காவை திரையில் பார்ப்பதால் அவரது பல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இருந்தாலும், ஜுலான் வேடத்தில் பெங்காலி நடிகரை நடிக்க வைக்காதது மற்றும் அனுஷ்காவின் பெங்காலி மொழி உச்சரிப்பு போன்ற காரணங்களுக்காக படத்தை பலர் விமர்சித்து வருகின்றனர்.

டீசர் வெளியானதை தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா இப்படம் மற்றும் ஜூலனின் வாழ்க்கை பற்றி பேசினார்.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

“இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம், ஏனெனில் இது அடிப்படையில் மிகப்பெரிய தியாகத்தின் கதை. சக்தா எக்ஸ்பிரஸ், முன்னாள் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகத்தால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது. இது பெண்கள் கிரிக்கெட் உலகில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஜூலன் ஒரு கிரிக்கெட் வீரராகவும், உலக அரங்கில் தனது நாட்டை பெருமைப்படுத்தவும் முடிவு செய்த அந்த காலகட்டத்தில், பெண்கள் விளையாடுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த திரைப்படம் அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்க பட்டு உள்ளது” என்று கூறினார்.

இருந்தாலும் நெட்டிசன்கள் அனுஷ்காவை விடுவதாக தெரியவில்லை. பல்வேறு மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Also Read  விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

”தமிழ்நாட்டிற்கு விருதை பெற்றுக் கொடுத்த என்னை சிறையில் அடைக்கலாமா?” – நடிகை மீரா மிதுன்..!

suma lekha

பாம்பு கடித்தது குறித்து நடிகர் சல்மான் கான் விளக்கம்.!

suma lekha

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

20 ஆண்டுகளுக்கு பின் இணையும் சூர்யா-பாலா கூட்டணி..!

Lekha Shree

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

Twitter Spaces-ல் தனுஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

எப்படி இருந்த ஷாலினி இப்படி ஆகிட்டாங்க! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை!

HariHara Suthan