a

இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்து ஆட்சியர் – வைரலாகும் வீடியோ


சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மருந்து வாங்க சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா போலீஸாருடன் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த சாஹில் குப்தாவை தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரனை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து செல்ல சென்றார்.

அப்போது அங்கு வந்த ஆட்சியர் ரன்பீர் சர்மா திடீரென அந்த நபரை அழைத்து சாஹில் கையில் வைத்திருந்த செல்போனை வாங்கி கீழே போட்டு உடைத்தார்.

அதிர்ச்சியுடன் அந்த நபர் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு மருந்து வாங்க செல்கிறேன் எனக் கூறியும் காதில் வாங்காமல் பார்க்க அவரது கன்னத்தில் பளார் என்றும் ஆட்சியர் அறைந்தார்.

இதற்கிடையில் அங்குவந்த காவலர் ஒருவர் அந்த நபரை தாக்கத் தொடங்கினார். மற்றொரு காவலரை பார்த்து இவனை அடியுங்கள் என ஆட்சியர் கூற அவரும் தாக்கினர்.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதையடுத்து ரன்பீர் சர்மாவை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

இளைஞரை அறைந்ததற்கு ரன்பீர் சர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பிச் செல்வதற்கு முயன்றதாகவும் அவரை பிடித்து விசாரித்ததில் எங்கே செல்கிறேன் என்பது குறித்து சரியான விளக்கம் அளிக்காமல் முன்னுக்குபின் முரணாகவே பேசியதாகவும் ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.

Also Read  முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூடநம்பிக்கையால் நேர்ந்த உச்சக்கட்ட கொடூரம்; பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி டம்பெல்ஸ்-ஆல் அடித்து நரபலி கொடுத்த தம்பதி!

Tamil Mint

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!

sathya suganthi

அமிதாப் பச்சன் மீது புகார்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் உயிரிழப்பு! – யாருக்கும் சொல்லாமல் அடக்கம் செய்த உறவினர்கள்!

Shanmugapriya

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Tamil Mint

மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு

Devaraj

வீட்டுக்கு செல்ல லேட் ஆனதை சமாளிக்க மாணவி சொன்ன பகீர் பொய் – போலீஸ் விசாரணையில் அம்பலம்

Tamil Mint