சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்வதும் மற்றும் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை பத்ரா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் மூலமாக செய்து வருகிறது.இந்தப் பத்ரா தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை இரவு 12 மணியோடு பத்ரா தனியார் நிறுவன ஒப்பந்தம் முடிவடைகிறது. அடுத்து ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏஐஏடிஎஸ் நிறுவனத்திடம் கார்கோவில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒப்படைக்கப் போவதாக சென்னை விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read  நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: கொரோனா இருந்து மீண்ட அமைச்சரின் அதிரடி

இதனால் பத்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சருக்கும், சென்னை விமான நிலைய இயக்குனரிடமும் பத்ராவில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் தற்போது வரவுள்ள புதிய தனியார் நிறுவனத்திலும் பணி வழங்க வேண்டும் என முறையிட உள்ளோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்தும், சென்னை விமான நிலைய நிர்வாகத்திடம் இருந்தும் எந்த ஒரு பதில்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள்  500க்கும் மேற்பட்டோர்  தங்களுக்கு தொடர்ந்து பணிகளை வழங்க வேண்டும் என கோரி சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு தொடர்ந்து பணிகளை வழங்க வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

Also Read  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - தமிழக அரசு ஆலோசனை!

இதையடுத்து தொழிலாளர் சங்க நிர்வாகி ஜஹாங்கீர் செய்தியாளரிடம் கூறியதாவது:-

நாளை இரவோடு பத்ராவின் காண்ட்ராக்ட் முடிகிறது இதனால் அதில் பணி செய்த தொழிலாளர்கள் வேலையை விட்டு செல்ல வேண்டும் என சென்னை விமான நிலைய ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளோம்.

Also Read  எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

கடந்த காலங்களில் காண்ட்ராக்ட் மாறினாலும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வந்தது. எனவே பத்ராவிற்கு பிறகு வரப்போகும் காண்ட்ராக்ட் அல்லது அதற்கு பொறுப்பான ஏர்போர்ட் அத்தாரிட்டியும், ஏஐ,ஏடி,எஸ் நிர்வாகமும், அனைத்து பத்ரா தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை தரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

எனவே ஏர்போர்ட் விமான நிலைய ஆணையம் இதற்கு உடனடியாக தீர்வு கண்டு தொழிலாளர்களின் வேலையை உறுதி செய்யவேண்டும் தொடர்ந்து பணிகளை வழங்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்டப் போராட்டத்திற்க்கு செல்வோம் என தெரிவித்தார்.

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின் கட்டணம் செலுத்த 3 வித சலுகைகள் – அமைச்சர் செந்தில்பாலாஜி

sathya suganthi

எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் – டிடிவி.தினகரன்

Tamil Mint

“12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தயார்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Lekha Shree

“மீண்டும் அண்ணா… வேண்டும் அண்ணா.. அண்ணா யாரு?” – விஜய் ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…!

Lekha Shree

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint

இன்று எம்எல்ஏவாக பதவியேற்காதவர்கள் பட்டியல் இதோ…!

sathya suganthi

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

தமிழகத்தில் தங்க காசு தரும் ஏடிஎம்….! எங்கு உள்ளது தெரியுமா?

Lekha Shree

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint