கொரோனா 3 வது அலை… ஹாட்ஸ்பாட்டாக மாறும் சென்னையின் 3 மண்டலங்கள்..!


சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவை சென்னையின் ஹாட்ஸ்பாட்டுகளாக மாறியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Coronavirus: How did a Tamil Nadu district move from hotspot to safe zone?  | Deccan Herald

இந்தியாவில் 1,800க்கும் மேற்பட்டோர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் அதிக அளவாக 578 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. ஓமைக்ரான் 3வது அலை பரவலுக்கு வித்திட்டுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

Also Read  எவரஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா…!

தமிழகத்தை பொருத்தவரை கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணங்கள், இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது போல் மழலையர் முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு நேரடி வகுப்பிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Live Chennai: Chennai Metro City wears a deserted look!,With the successive  Pongal holidays, Chennai Metro City!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அது போல் சென்னையில் 876 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அண்டைய மாவட்டங்களான திருவள்ளூரில் ஒரே நாளில் 80 பேருக்கும் செங்கல்பட்டில் 158 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read  மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

கோயமுத்தூரில் 105 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு கொரோனா கேஸ்களில் ஒன்று சென்னையிலிருந்து என்ற அளவுக்கு அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து 70 சதவீதம் பேர் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்ற தரவு வெளியாகியுள்ளது.

Royapuram new hotspot in Chennai? Locality reports highest growth rate of  fresh COVID-19 cases at 9.- The New Indian Express

சென்னையில் உள்ள மண்டலங்கள் வாரியாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவை ஹாட்ஸ்பாட்டாக மாற அதிக வாய்ப்பிருப்பதாக கூறபப்டுகின்றது.

தேனாம்பேட்டையில் 538, அடையாறில் 528, கோடம்பாக்கத்தில் 520, ராயபுரத்தில் 432, அண்ணாநகரில் 397, வளசரவாக்கத்தில் 289, திருவிக நகரில் 276, தண்டையார்பேட்டையில் 272, அம்பத்தூரில் 260, ஆலந்தூரில் 186, பெருங்குடியில் 149, சோழிங்கநல்லூரில் 137, திருவொற்றியூரில் 108, மாதவரத்தில் 95, மணலியில் 32 , மற்ற மாவட்டங்களில் 40 என கொரோனாவால் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  "சசிகலா தாய் அல்ல பேய்” - நத்தம் விஸ்வநாதனின் அதிரவைக்கும் பேச்சு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: இன்று தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கை..!

suma lekha

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்த மழை இன்று இரவிலும் தொடர்கிறது

Tamil Mint

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு..!

Lekha Shree

“சென்னையின் நிலைக்கு திமுக ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் காரணம்!” – சசிகலா

Lekha Shree

மதுரை: பிறந்து 6 நாட்களே ஆன பெண் சிசு கொலை? தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!

Lekha Shree

ஆஸ்துமா நோயாளிகள் முகக்கவசம் அணியலாமா? – மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

Shanmugapriya

கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்: கே.பி.அன்பழகன்

Tamil Mint

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள்! – மகாராஷ்டிராவில் கொடூரம்!

Shanmugapriya

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj