‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!


சென்னையில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றித் தூய்மைப்படுத்தும் புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடை, பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் அதனை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

சுவரொட்டிகள் இல்லாத சென்னை என்ற இலக்கை எட்ட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Also Read  "ஊடகங்களை மிரட்டும் வகையில் நான் பேசவில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகளை அகற்றிய பிறகு அந்த இடத்தில் அழகாக வர்ணம் பூசி அழகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

Also Read  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த பணிகளில் ஈடுபட விரும்பினால் பங்குபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகளை அகற்றி புதிதாக வர்ணம் பூசி அழகுபடுத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சிங்காரச் சென்னை திட்டத்திற்கு அச்சாரமிடுவதாக அமைந்துள்ளது.

Also Read  கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? – தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!

Lekha Shree

தொடங்கியது அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம்! 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்? அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக? குழப்பத்தில் அதிமுக!

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

ஸ்டெர்லைட்டுக்கு நோ சொன்ன உச்சநீதிமன்றம்

Tamil Mint

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

மறைந்த தந்தையின் சிலையை வடிவமைத்து தங்கைக்கு திருமண பரிசு கொடுத்த சகோதரிகள்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!

Tamil Mint

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை வரும் 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணியில் உயிர் நீர்த்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi